தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள்… இஸ்லாமிய இயக்க மதபோதகர்கள்!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

nia office - 2026

தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மதபோதகர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தங்கள் பேச்சுக்கள் மூலமாக பயங்கரவாதத்தையும் பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் பரப்பி வரும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மத போதகர்களை மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறியபோது, தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 26 இஸ்லாமிய மத போதகர்களை மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் மத பிரச்சாரங்களில் பயங்கரவாதத்துக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து பேசி வருகின்றனர். பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் பரப்பி வருகின்றனர்.

இவர்களில் சிலர் அல்கொய்தா ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் பேசி வருகின்றனர். சில பயங்கரவாதிகள் இவர்களுடன் தொடர்பில் இருப்பதும் கூட தெரியவந்துள்ளது

இவர்கள், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள சில மசூதிகள் இஸ்லாமிய இயக்கங்களின் அலுவலகங்கள் ஆகியவற்றை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்

அவர்களின் பெயர்களை தற்போது வெளியிட முடியாது ஆனால் அவர்கள் அனைவரும் மத்திய அரசின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் விரைவில் அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்று அவர்கள் கூறியுள்ளனர்…

1 thought on “தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள்… இஸ்லாமிய இயக்க மதபோதகர்கள்!”

  1. கண்காணித்து என்ன பிரயோஜனம் ? அவர்களின் கொட்டத்தை மத்திய அரசால் அடக்கமுடியவில்லை ? ஏன் அழிக்க முடியவில்லை? இந்தியாவை சுத்தப்படுத்துகிறேன் என்று மோடிஜி சொல்லிக்கொண்டே இருப்பின் எப்போது ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.