பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் இடம்பெற்றிருந்த படைப்பிரிவுக்கு விமானப்படையின் கவுரவ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையில், விங் கமாண்டராக பணியாற்றி வருபவர், தமிழகத்தைச் சேர்ந்த, அபிநந்தன், 36. கடந்த பிப்., 27 ல் வான்வெளியில் பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து, அந்நாட்டின் எப்.,16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன், இடம்பெற்றிருந்த 51வது படைப்பிரிவுக்கு இந்திய விமானப்படையின் ”யூனிட் சைட்டேசன்” எனப்படும் விருது வழங்கப்படும் என விமானப்படை தளபதி, ஆர்கேஎஸ் பதுரியா அறிவித்துள்ளார்.
.மேலும், இதே விருது, பாலகோட்டில் தாக்குதல் நடத்திய மிராஜ் 2000 போர்விமானங்கள் இடம்பெற்றிருந்த 9வது படைப்பிரிவு மற்றும் சிக்னல் பிரிவு தலைவர் மிண்டி அகர்வாலுக்கும் வழங்கப்படுகிறது. வரும் 8 ம் தேதி நடக்கும் இந்திய விமானப்படையின் 87 வது ஆண்டு விழாவின் போது, இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது. விமானப்படை தளபதி பதூரியா இந்த விருதுகளை வழங்குகிறார் .இந்த விருதை , குழுவின் கேப்டன் சதீஷ் பவார் பெற்று கொள்வார்
Wing Cdr Abhinandan Varthaman’s 51 Squadron to be awarded unit citation by IAF Chief Air Chief Marshal RKS Bhadauria for thwarting Pakistani aerial attack&shooting down a Pakistani F-16 on Feb 27. Award to be received by commanding officer Group Captain Satish Pawar (file pic) pic.twitter.com/lQjf4dLzT6
— ANI (@ANI) October 6, 2019