மணமாகி மூன்றே நாள்… பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

கிரைம் நியூஸ் பொது தகவல்கள்
sankitha - 2026

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்.. இவரது மகள் திவ்யா 21 வயதாகிறது! வாலாஜாபேட்டை அரசு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் வருடம் படித்து வந்தார்.

படித்து கொண்டிருந்த பிள்ளையை, காலேஜுக்கு போகவிடாமல் தடுத்து நிறுத்தி… திடீரென வீட்டில் கல்யாணம் செய்து வைத்துவிட்டனர்.

சென்னையை சேர்ந்த ராகவேந்திரன் என்பவருடன் கடந்த 7-ம் தேதி திருமணம் நடந்தது. ராகவேந்திரன் சென்னையில் போலீஸ்காரராக உள்ளார். கல்யாணம் முடிந்து மணப்பெண் திவ்யாவை அழைத்துக்கொண்டு சினிமா, கோயிலுக்கு சென்றார் மாப்பிள்ளை.

3வது நாள் திவ்யாவின் அம்மா வீட்டில் விருந்துக்கு அழைத்து இருந்தனர்.. அதனால், திவ்யாவின் அக்கா சங்கீதா வீட்டுக்கு புதுமண தம்பதி விருந்து சாப்பிட சென்றனர். தடபுடல் சாப்பாடு தயாராக இருந்தது.. ஆனால் திவ்யா மட்டும் சரியாக சாப்பிடவில்லை. யாருடனும் பேசவும் இல்லை. என்னாச்சு என்று கேட்டதற்கு, உடம்பு சரியில்லை என்று மட்டும் பதில் சொல்லி உள்ளார்.

பிறகு தூங்க போகிறேன் என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் போன திவ்யா கதவை பூட்டிக் கொண்டு, ஃபேனில் தூக்கு போட்டு தொங்கிவிட்டார். கதவை தட்டியும் திறக்காததால், உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோதுதான் திவ்யா பிணமாக தொங்கியது தெரியவந்தது.. இதனால் குடும்பத்தினர் திவ்யா சடலத்தை கட்டிப்பிடித்து கொண்டு அழுதனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

கல்யாணம் ஆன 3-வது நாளில் தூக்கில் தொங்கிய இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை சப்-கலெக்டர் மற்றும் காவல்துறையின் விசாரணை நடந்து வருகிறது.. காலேஜ் படிப்பை நிறுத்திவிட்டதால், திவ்யா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.