இது அஷ்ட நாகங்களின் கூட்டணி. ஆனால் வெளியே தெரிவது இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்திருப்பது போல் தோன்றும்.
அனந்தன், பத்மன், வாசுகி, மகாபத்மன், தட்சகன், கார்க்கோடகன்,… உள்ளிட்ட 8 நாகங்களின் கூட்டணி இந்த ஸர்ப்பக் கோலம்.
இது கல்யாண சர்ப்பம் என்று கூறப்படுகிறது. ஏதோ கோலம் போட்டு விளையாடுவது மாதிரி இதன் தோற்றம் தெரியும்… ஆனால் அற்புதமான வடிவம் இது.
எங்கே என்று கேட்கிறீர்களா? இன்று காலை திருவரங்கத்தில் இருந்து அப்படியே கிளம்பி திருப்பாம்புரம் சென்று இந்தக் கோயிலை தரிசித்து விட்டு, அப்படியே திருநள்ளாறுக்கு ஒரு சுற்று விட்டேன்.
இந்தக் கல்யாண சர்ப்ப திருக்கோலம் சுதை வடிவம் – திருப்பாம்புரம் ஸ்ரீசேஷபுரீஸ்வரர் கோயில் சந்நிதியில் தனி சந்நிதியில் உள்ளது. இந்தத் தலம் ராகு – கேது பரிகார தலம் என்று புகழ்பெற்று விளங்குகிறது.
ஒரு சிறப்பு என்னவென்றால்….. காவிரிக் கரையில்தான் எறும்பு வழிபட்ட திருவெறும்பூர், யானை வழிபட்ட திருவானைக்கா, பாம்பு வழிபட்ட திருப்பாம்புரம், ஈ வழிபட்ட ஈங்கோய்மலை என (மனிதனைத் தவிர மற்ற???) ஜீவராசிகளெல்லாம் வழிபட்ட தலங்கள் உள்ளன.