ஹிந்துத்துவம் ஒரு வாழ்க்கை வழிமுறை. வாழ வழிகாட்டும் நெறிமுறை. ஹிந்து என்ற ஒரு சொல், ஒரு மதத்தைக் குறிப்பிட்டு ஒரு இனத்தை அதனுள் அடக்கி விடுவதல்ல.
இந்த நாட்டில் எத்தனையோ இனங்களைச் சேர்ந்த ரிஷிகள், முனிவர்கள், மக்கள் தங்கள் அனுபவங்களை வாழ்க்கை வழிமுறையாக்கிக் கொடுத்தனர். ஹிந்துத்துவம் என்பது, அதன் அடிப்படையில் இந்த நாட்டின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப கடைபிடிக்கப் படுவதுதான்!
அனைத்து உயிர்களையும் இறைவனின் படைப்பாக மட்டுமல்ல, இறை அம்சம் கொண்டதாகவே கருதுவது ஹிந்துத்துவம். யானை, பூனை, நாய், பாம்பு, குரங்கு, எறும்பு என அனைத்து ஜீவராசிகளிடத்தும் இறைவன் உறைகின்றான் என்று சொல்லி, அவற்றை வணங்குவதும், அவை வாழ வழி செய்தும் கற்றுக் கொடுத்தது. மண்ணும், மலையும், நீரும், நெருப்பும், எல்லாம் இறை அம்சமே என்றனர்.
சக மனிதனின் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் என்ற அளவோடு நின்றுவிடாமல், மற்ற உயிர்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் காட்டைப் போற்றி வன நாராயணனாக வழிபட்டு, குரங்கையும் அனுமன் தோழனாக வழிபட்டு, யானை, புலி, சிங்கம், காளை எல்லாம் இறைவன் செல்லும் வாகனங்களாக்கி ஆன்மிகச் சிந்தையுள் புகுத்தினார்கள்.
இவை, உயிரி சமநிலைக்கு உத்வேகம் ஊட்டுவது. அந்த வகையில் குரங்குக்கு உணவு படைத்து ஆன்மிக வாழ்வின் ஓர் அம்சத்தைக் காட்டுகிறார் இவர்….
This video will restore your faith in humanity ??? pic.twitter.com/wnX3t26txn
— ॐSaandika ?? (@Saandika21) June 25, 2018




