ஐ.நா.வில் போய் பேசும் முன் கிருஷ்ண மேனனைத் தெரிந்து கொள்ளுங்கள்!

Published:

It’s a rare photo…. In 1957 when V.K. Krishna Menon of India gave what is said to be longest speech to the Security Council. He was reportedly hospitalized after 5 hours, but continued for 3 hours more the next day.
It’s a rare photo…. In 1957 when V.K. Krishna Menon of India gave what is said to be longest speech to the Security Council. He was reportedly hospitalized after 5 hours, but continued for 3 hours more the next day.

ஐ.நா.வில் நீண்ட உரையாற்றியவர் கிருஷ்ணமேனன். ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில், இந்தியாவின் பிரதிநிதியாக வி.கே.கிருஷ்ணமேனன் 1957இல் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் உரிமை குறித்து ஒரு நீண்ட உரையை ஆற்றினார். தனது உரையின் முதல் நாள் 5 மணிநேரமும், மறுநாள் 3 மணி நேரமும் பேசியது; இந்த உரை தான் உலகளவில் ஐ.நா.வில் இதுவரை ஆற்றியதில் நீண்ட உரை என இன்று வரை நினைவுகூரப்படுகிறது.

இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சராகவும், நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நேருவின் நெருங்கிய சகாவாகவும் விளங்கினார். இந்த அரிய புகைப்படம் 1957இல் ஐ.நா. சபைக்கு உரையாற்ற வந்தபோது எடுக்கப்பட்டது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் யாரும் புரிந்து கொள்ளாத அளவில் வி.கே.மேனன் சாலை என்று பெயர் பலகையை பார்த்தேன்.

இதை குறித்தும் இரண்டாண்டுகளுக்கு முன்பாக ஒரு பதிவையும் செய்துள்ளேன். கோவைக்கும் வி.கே.கிருஷ்ணமேனனுக்கும் தொடர்புகள் இருந்தது. வி.கே.கிருஷ்ணமேனனின் ஆளுமையை தெரியாதவர்கள் இன்றைக்கு அதிகாரவர்க்கத்தில் இருக்கிறார்கள்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

#UN #V_K_Krishnamenon #Kashmir_Problem #ஐநாசபை #விகேகிருஷ்ணமேனன்
#காஷ்மீர்_சிக்கல்

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img