சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
விஜயகாந்த் இரவு 8 மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர்.
இதனிடையே தேமுதிக., நிறுவனத் தலைவர் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக., வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.




