144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கர் திருவிழாவிற்கு ஸ்ரீவைகுண்டத்தில் மிகச்சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது .
ஸ்ரீவைகுண்டம் சிறப்புகள்
* 108 திவ்யதேசத்தில் 54 வது திவ்ய தேசம் – மூலவர் ஸ்ரீ வைகுண்டபதி | நின்ற திருக்கோலம் | உற்சவர் – ஸ்ரீகள்ளர்பிரான்
* நவகைலாயத்தில் – சனி பரிகார ஸ்தலம். சிவன் இத்தலத்தில் சனியாக காட்சி தருகிறார், சனியின் தோசங்கள் அகலும். இத்தலத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி வழிபாடு விசேசமானது, திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் கிட்டும்
* பிரம்மா தவம் செய்து சாப நிவர்த்தி பெற்ற ஸ்தலம் * தீர்த்தம் – பிரம்ம தீர்த்தம். இது கூடுதல் சிறப்பு .ஆகவே 3 1/2 கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன்கிட்டும் .
புஷ்கர் பிரம்ம தீர்த்தத்தில் தான் வாசம் செய்கிறார். தாமிரபரணி மகாத்மியம் படி புரட்டாசி மாதம் ஸ்ரீவைகுண்டத்தில் நீராட உகந்தது ,முழுபலன் கிட்டும் .
* சூரிய பகவான் ஸ்ரீ வைகுண்டபதி அருள்பெற்ற ஸ்தலம். ஆகவே அரசியல் செல்வாக்கு, பதவி,ஆளுமை,அதிகாரம்,தலைமை பொறுப்பு ,வேலைவாய்ப்பு கிட்டும் ,திருமணம் கைகூடும்
* சந்திரன் அருள்பெற்ற ஸ்தலம் ஆகவே புகழ்,மனநிம்மதி கிட்டும்.
* உற்சவர் பெயர் ஸ்ரீ கள்ளர்பிரான். இவர் திருட்டு ,ஊழல் , லஞ்சம் , பிறர் சொத்து அபகரிப்பு போன்ற தவறான வழியில் சேர்த்த செல்வம் ,அதனால் வரும் பிரச்னைகள், வழக்குகளை நிவர்த்தி செய்து , தானம்,தர்மம் செய்யவும், அவர்களுக்கு தர்மத்தின் வழி காட்டிய ஸ்தலம்
* திருப்பனந்தாள் காசி மட ஸ்தாபகர்,கங்கையில் கேதாரம் அமைத்த, சமய குரவரும், தமிழ் வளர்த்த குமர குருபரர் அவதார ஸ்தலம்
செய்யப்பட்டு வரும் சிறப்பு வசதிகள்
* படித்துறைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது
* தினமும் அன்னதானம் நடைப்பெறும் ( காலை ,மதியம் )
* கழிப்பிடவசதி ஏற்பாடாகி வருகிறது
* பெண்கள் உடைமாற்றும் அறை
* ஆற்றங்கரை தூய்மைப்பணி
* யாகசாலை
* பாதுகாப்பு உபகரணங்கள்
தினசரி நிகழ்ச்சி நிரல்
காலை : ஹோமம், கோ பூஜை சங்கல்பம் பாராயணம் பிரசாதம்
மதியம் : அன்னதானம்
மாலை : 4-6 கலை நிகழ்ச்சி
மாலை 6 : மகா ஆரத்தி வழிபாடு
* சிறப்பு பூஜைகள்
கணவன் மனைவி ஒற்றுமைக்கும் ,மகிழ்ச்சி க்கு தம்பதி பூஜை, கோ பூஜை, திருமணம் கைகூட, புத்திர பாக்கியம் கிட்ட, வெற்றி கிட்ட,விவசாயம் செழிக்க , கடன்பிரச்சனை நீங்க ,செல்வம் பெருக , கல்வி,வேலைவாய்ப்பு கிட்ட , எதிரி பயம் நீங்க, வழக்கு பிரச்சினைகள் அகல சிறப்பு யாகம் நடைபெறும்.
இறுதி நாளன்று பொங்கல் வழிபாடு நடைபெறும்
ஸ்ரீவைகுண்டம் மகாபுஷ்கர் கமிட்டி
தொடர்பு: 94424 97877 | 9487555007 | 9840791765 | 9940738994 | 7373478383





