முகமது பின் துக்ளக் படத்தில் ஒரு சீன் வரும்.. ஆட்சி அமைக்க ஆதரவு தர்றேன்னு சொல்ற 450 பேரையும் உதவி பிரதம மந்திரியாக்கிடுவாரு பிரதமராக வரும் சோ.. அத்தனை பேரும் இலாகா இல்லாத உதவி பிரதமருங்க.
இந்த சீனுக்கு அடிப்படையான ஒரு ஒரிஜினல் சீன்.. 1966ல் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இறந்ததும் காங்கிரசில் சீனியரான மொரார்ஜி தேசாய்தான் பிரதமரா வந்திருக்கணும்..பலரும் அவருக்குத்தான் ஆதரவு தெரிவிச்சாங்க..
நம் கிங் மேக்கர் காமராஜரு, இந்திரா காந்திதான் வேணும்னு அடம்பிடிச்சாரு.. அதுக்காக ஆதரவும் திரட்டினாரு..இருந்தாலும் பலருக்கு பிடிக்கலை..
பார்த்தாங்க இந்திரா காந்தி.. காமராஜை மட்டுமே நம்பியிருக்காம, பட்டுன்னு ஒரு அதிரடி ஆக்சன்ல இறங்குனாங்க.. எக்கச்செக்கமான எம்பிங்களுக்கு போனை போட வெச்சாங்க… உன்னை நான் மினிஸ்டராக்கலாம்னு பார்த்தா நீ என்னய்யா மொரார்ஜி பின்னாடி போயிக்கிட்டு இருக்கேன்னு ஒரு கொக்கி போட்டாங்க.. தில்லாலங்கடி வேலை வொர்க் அவுட் ஆக ஆரம்பிச்சிது..
அடடா நமக்கு மந்திரி பதவியே வரும்போலன்னு அம்புட்டு எம்பியும் கவுந்தாங்க…மொரார்ஜியையும் கவுத்தாங்க..கடைசியில அழுத கொழந்தையாக சீனியர் மொரார்ஜிக்கு டெபுடி பிஎம்னு ஒரு பால் புட்டியை சொருவிட்டு, அப்பத்திக்கு பாலிடிக்ஸ்ல சோட்டா பீமா இருந்த இந்திரா பீஎம் ஆயிட்டாங்க..
அந்தம்மா அந்த அளவுக்கு அரசியல்ல படு கில்லாடி.. விதி படத்தோட டயலாக் மாதிரி சொன்னா, அம்புட்டு ஆம்பிளை அரசியல்வாதிங்க மத்தியில அவ்ளோ நேக்கா அப்பளம் பொரிச்சி வித்தையை காட்னவங்க!
கருத்து: ஏழுமலை வேங்கடேசன் (ஊடகவியலாளர்)




