சந்திரசேகர ஆசாத் என அழைக்கப்படும் சந்திரசேகர சீதாராம் திவாரி இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவர். இந்துசுத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோரி ரயில் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உருவாக்கம், பிரித்தானிய அதிகாரி சான்டர்சு கொலை போன்றவற்றைச் செய்தவர்.
காந்தி, 1922ல் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்ட பின்னரும் ஆசாத் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். முழுச் சுதந்திரத்தை எந்த வழியினும் அடைய வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே அர்பணித்துக் கொண்டார். இவரது இளம்வயதில் இவரை பிரன்வேசு சாட்டர்ச்சி என்பவர் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை ஆரம்பித்த ராம் பிரசாத் பிசுமில் என்றவரிடம் அறிமுகப்படுத்தினார். விளக்குத்தீயில் தன் கையை எரித்துத் தனது தேசபக்தியை வெளிப்படுத்திய பின் பிசுமில் அவரைத் தன் அமைப்பில் சேர்த்துக் கொண்டார். சாதி, மத பணப் பேதமில்லாத அனைவருக்கும் சுதந்திரம் என்ற இந்துசுத்தான் குடியரசு அமைப்பின் கொள்கை ஆசாத்தை மிகவும் ஈர்த்தது. அதன்பின் அந்த அமைப்பை வளர்ப்பதற்காக பிரித்தானிய அரசாங்க பொருட்களை அவர் கூட்டாளிகளுடம் சேர்ந்து பிசுமிலின் சொந்த ஊரான சாசகான்பூர் வட்டாரத்திலேயேக் கொள்ளை அடிக்க ஆரம்பித்தார். அதில் 1925ல் நடந்த ககோரி ரயில் கொள்ளையும் ஒன்று. மேலும் சோசியலிச வழியிலேயே நாளைய இந்தியாவும் இந்திய சுதந்திரமும் இருக்க வேண்டுமென எண்ணினார்.
இந்துசுத்தான் குடியரசு அமைப்பு 1924ல் ராம் பிரசாத் பிசுமில், யோகேசு சந்தர் சேட்டர்ஜி, சசிந்திரநாத் சன்யால், சசிந்திரநாத் பக்ச்சி போன்றவர்களால் ஒத்துழையாமை இயக்கத்தை அடுத்த 2 ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. 1925ல் இவ்வமைப்பால் நடத்தப்பட்ட ககோரி ரயில் கொள்ளையை அடுத்து பிரித்தானிய அரசாங்கம் புரட்சியாளர்களை அழிக்கத் தீவிரப்படுத்தப்பட்டது. பிரசாத், அசஃபகுலா கான், தகூர் ரோசன் சிங், ராசேந்திர நாத் லகரி போன்றவர்கள் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்டதால் அவர்கள் கொல்லப்பட்டனர். ஆசாத், சக்ரவர்த்தி, மற்றும் முராரி சர்மா போன்றவர்கள் பிடிக்கப்பட்டனர். ஆசாத் மீண்டும் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை மீளுருவாக்கினார். மேலும் ஆசாத்திற்கு பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பகவதி சரன் அரோரா என்றவருடன் பழக்கம் இருந்தது. அவர்கள் அனைவரும் இணைந்து இந்துசுத்தான் குடியரசு அமைப்பை இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற பெயருடன் மறு உருவாக்கம் செய்தனர். அதன்படி சோசியலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை அவர்கள் கொள்கையாகக் கொண்டனர்.
ஆசாத் கதாபாத்திரம் இடம் பெற்ற திரைப்படங்கள்
சாகித், தி லெசன்ட் ஆஃப் பகத்சிங், ரங் தே பசந்தி



