சத்தான வாழைப்பூ உருண்டைக் குழம்பு !

Published:

vazhaipu - 2026வாழைப்பூ உருண்டை குழம்பு :

தேவையான பொருட்கள் ;

வாழைப்பூ                    –  1

துவரம் பருப்பு              –  100 கிராம்

கடலைப்பருப்பு            –  4 ஸ்பூன்

காய்ந்த மிளகாய்          – 4

கடுகு,வெந்தயம்           –  தாளிக்க

சாம்பார்தூள்                = 2 ஸ்பூன்

புளி                             – நெல்லிக்காய் அளவு

எண்ணெய்                  – தேவையான அளவு

உப்பு                            = தேவையான அளவுkuzhambu e1566130467936 - 2026செய்முறை :

வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி கடாவில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். துவரம் பருப்பு, கடலைபருப்பு இரண்டையும் 1 மணிநேரம் ஊறவைத்து, காய்ந்த மிளகாயைச் சேர்த்து சற்றுக் கெட்டியாக அரைக்கவும். அதனுடன் வாழைப்பூ, உப்பு சேர்த்து உருண்டைகளாக பிசைந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவிடவும்.

கரைத்த புளித்தண்ணீருடன் சாம்பார்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பின் அதில் வேகவைத்த உருண்டைகளைப் போட்டு கொதிக்க வைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும். சுவையான வாழைப்பூ உருண்டைக்குழம்பு தயார்.

Related articles

Recent articles

spot_img