வாழ்க்கைக்கான ரூட்டு : வாழைத்தண்டுக் கூட்டு :

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
vazhai thandu - 2026

வாழைத்தண்டு மோர்க்கூட்டு

தேவையானவை:

நறுக்கிய வாழைத்தண்டு – ஒரு கப்,

கடைந்த தயிர் – 2 கப்,

பச்சை மிளகாய் – ஒன்று,

சீரகம், தனியா – தலா அரை டீஸ்பூன்,

வெந்த கடலைப்பருப்பு – அரை கப்,

இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,

கடுகு, எண்ணெய் – தலா அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – சிறிதளவு,

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

உப்பு – தேவையான அளவு.

more kuttu - 2026

செய்முறை:

வாழைத்தண்டை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். பச்சை மிளகாய், தனியா, சீரகம், கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து வேக வைத்த வாழைத் தண்டுடன் சேர்க்கவும்.

இதனுடன் தயிர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், வெந்த பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து, இது நுரைத்து பொங்கி வரும்போது எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.