ஆரோக்கிய சமையல்: தினை கேரட் அல்வா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
thinai rice - 2026

தினை கேரட் அல்வா

தேவையானவை:

வறுத்த தினை – அரை கப்

கேரட் – 5 (துருவவும்)

காய்ச்சிய பால் – 2 கப்

சர்க்கரை – அரை கப்

நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

முந்திரி – 10

உலர்திராட்சை – 10

ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை

kerat 1 - 2026

செய்முறை:

பிரஷர் குக்கரை அடுப்பில்வைத்து, அதில் கேரட், தினை சேர்த்து, பால் ஊற்றி, மூன்று விசில்விட்டு இறக்கவும் (தேவைப்பட்டால் கொடுத்திருக்கும் அளவைவிடக் கூடுதலாகப் பால் ஊற்றிக்கொள்ளலாம்). ஒரு வாணலியை அடுப்பில்வைத்து, அதில் சிறிதளவு நெய் ஊற்றிக் காயவிட்டு, முந்திரி, உலர்திராட்சையைப் பொன்னிறமாக வறுக்கவும்.

kerat halwa - 2026

பின்னர் குக்கரில் வேகவைத்த கேரட் விழுதை அதே வாணலியில் ஊற்றி 10 – 15 நிமிடங்களுக்குக் குறைந்த தீயில் கிளறவும். கலவையானது கெட்டியாகும் வரை வேகவிடவும். பின்னர் இதில் சர்க்கரை சேர்த்துக் கிளறி கடைசியாக மீதி நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய நார்ச்சத்து கேரட்டில் அதிக அளவில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.