
ஸ்ரீ மதே இராமானுஜாய நம : ஐப்பசியில் திருமூலம் ஸ்ரீ கோயில் அழகிய மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம் இன்று.
இன்று ஐப்பசி திருமூலம் ஶ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் அவதரித்த நன்னாள்
ஐப்பசி திருமூலம். ஸ்ரீ மணவாளமாமுனிகள் 650 திருநக்ஷத்திரம் ஆரம்பம்.
ஸ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||
திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்கானவரை, ஞானம் பக்தி வைராக்யம் போன்றவைகளின் கடலை, எம்பெருமானார் மீது பெருத்த மையல் உடையவரான அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்) வணங்குகிறேன் .
செந்தமிழ் வேதியர் சிந்தை தெளிந்து சிறந்து மகிழ்ந்திடுநாள்!
சீருல காரியர் செய்தருள் நற்கலை தேசு பொலிந்திடுநாள்!
மந்த மதிப்புவி மானிடர் தங்களை வானி லுயர்த்திடுநாள்!
மாசறு ஞானியர் சேரெதிராசர் தம் வாழ்வு முளைத்திடுநாள்!
கந்த மலர்ப்பொழில் சூழ்குருகாதிபன் கலைகள் விளங்கிடுநாள்!
காரமர் மேனியரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடுநாள்!
அந்தமிழ்சீர் மணவாள முனிப்பர னவதாரம் செய்திடுநாள்!
அழகு திகழ்ந்திடு மைப்பசியில் திருமூலமதெனுநாளே
செய்ய தாமரைத் தாளினை வாழியே
சேலை வாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே
சுந்தரத் திரு தோளினைவாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யில்லாத மணவாள மாமுனி புந்தி வாழி புகழ் வாழி வாழியே
இப்புவியி லரங்கேசர்க் கீடளித்தான் வாழியே!
எழில் திருவாய் மொழிப்பிள்ளை யிணையடியோன் வாழியே!
ஐப்பசியில் திருமூலத் தவதரித்தான் வாழியே!
அரவரசப் பெருஞ்சோதி யநந்தனென்றும் வாழியே!
எப்புவியும் ஸ்ரீ சைல மேத்தவந்தோன் வாழியே!
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே!
முப்புரிநூல் மணிவடம் முக்கோல் தரித்தான் வாழியே!
மூதரிய மணவாள மாமுனிவன் வாழியே!
அழகிய மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்
பெரிய நம்பிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே*
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே*
ஐப்பசியில் திருமூலத் தவதரித்தான் வாழியே*
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே*
எப்புவியும் ஸ்ரீ சைலம் ஏத்தவந்தோன் வாழியே*
ஏராரு மெதிராசரெனவுதித்தான் வாழியே*
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல் தரித்தான் வாழியே*
மூதரியவன் மணவாள மாமுனிவன் வாழியே!
ஸ்ரீ கோயில் அழகிய மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்



