ஆரோக்கிய சமையல்: கல்கண்டு வடை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
kalkandu - 2026

கல்கண்டு வடை

தேவையானப் பொருட்கள்:
உளுந்து – 200 கிராம்

பச்சரிசி – 2 ஸ்பூன்

கல்கண்டு – 100 கிராம்

செய்முறை:

kalkandu vadai - 2026

உளுந்து, பச்சரிசியை இரண்டையும் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் கிரைண்டரில் இரண்டையும் கெட்டியாக அரைக்கவும். மாவு நிலைக்கு வந்ததும், தூளாக்கிய கல்கண்டை மாவுடன் சேர்க்கவும்.

வடை பதத்துக்கு மாவு வந்ததும் எடுத்து, வழக்கம்போல வாழையிலையில் தட்டி வாணலியில் உள்ள சூடான எண்ணெயில் போட்டு எடுக்கவும். அடுப்பு மிதமான தீயில் இருப்பது அவசியம்.

இதிலிருக்கும் குளூக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலைச் சீராக்கி நல்ல புஷ்டியைத் தருகிறது. வயிற்றுப் புண்ணை குணப்படுத்தி, ரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளைப் போக்குகின்ற நல்ல மருந்தாகவும் கல்கண்டு செயல்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.