சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
sepank 1 - 2026

சேப்பங்கிழங்கு ரோஸ்ட் :

தேவையானவை:

சேப்பங்கிழங்கு – 500 கிராம்,

சோள மாவு – ஒரு டீஸ்பூன்,

அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் – 200 மில்லி,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

rost sepank 1 - 2026

சேப்பங்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். ஆறியவுடன் தோல் உரித்து சரிபாதியாக நறுக்கவும். அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, நறுக்கிய சேப்பங்கிழங்கு துண்டுகளில் சேர்த்து நன்கு கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது சிறிதாக சேப்பங்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: மாவுடன் தண்ணீர் சேர்க்கக் கூடாது, சேப்பங்கிழங்குடன் சோள மாவு சேர்ப்பதால் மொறுமொறுவென இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.