செங்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம்!

Published:

sengottai rotary nilavembu - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில், அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு மற்றும் நகராட்சி ஆகியவை இணைந்து நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாமை நடத்தின.

டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் முன்தடுப்பு நடவடிக்கையாக, நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு செங்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்.

sengottai rotary - 2026

அரசு சித்த மருத்துவ பிரிவு டாக்டர் கலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நில வேம்பு கசாயம் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் என சுமார் ஆயிரம் பேருக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் நகராட்சி பொது சுகாதார அலுவலர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் மகேஷ்வரன் அரசு நூலகர் ராமசாமி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் அபு அண்ணாவி, நாதன், அருணாச்சலம், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

Related articles

Recent articles

spot_img