ஜெகன் எடுத்த முடிவு! சிங்கப்பூர் அதிகாரிகள் மகிழ்ச்சி!

அடடே... அப்படியா? இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
jagan bhuddha - 2026

இப்போதைய அரசின் முடிவு ஒரு விதத்தில் அவர்களுக்கு திட்டத்தில் இலிருந்து விடுதலை அளித்துள்ளது என்று ஐஒய்ஆர் கிருஷ்ணா ராவு ட்விட் செய்துள்ளார்.

அண்மையில் ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜகன் “தலைநகரின் ஸ்டார்ட் ஆஃப் ஏரியா” பிராஜெக்டை ரத்து செய்து முடிவெடுத்துள்ளார். தலைநகரில் 6.84 சதுர கிலோ மீட்டரின் வளர்ச்சிக்காக அமராவதி டெவலப்மென்ட் கார்ப்பரேஷனுக்கும் சிங்கப்பூர் கம்பெனிகளுக்கும் இடையே அப்போதைய அரசின் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை அமராவதி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் மற்றும் சிங்கப்பூர் கம்பெனிகள் பரஸ்பர அங்கீகாரத்தோடு ரத்து செய்ததாக அரசு அறிவித்துள்ளது. மூன்று நிலைகளாக ஸ்ட்ராட் ஆஃப் ஏரியாவை அபிவிருத்தி செய்வதாக சந்திரபாபு அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த ஒப்பந்தத்தை ஜெகன் அரசு ரத்து செய்துள்ளது.

அதன்பின் அமராவதி ஸ்டார்ட் ஆஃப் ஏரியா ப்ராஜெக்டில் இருந்து விலகுவதாக சிங்கப்பூர் அதிகாரிகளும் அறிவித்துள்ளார்கள். தற்போதைய அரசுக்கு அமராவதியை தலைநகராக்கும் எண்ணம் இல்லை என்ற விஷயத்தைப் புரிந்து கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதனால்தான் இந்த திட்டத்தில் இருந்து விலகிச் செல்வதாக சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

சமீபத்தில் இந்த அம்சம் குறித்து அரசு முன்னாள் முதன்மைச் செயலர் ஐஒய்ஆர் கிருஷ்ணாராவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது:

“சுற்றுச்சூழல் பிரச்னை, வெள்ளம் போன்ற காரணங்களால் இந்த திட்டம் சாத்தியப்படாது என்று சிங்கப்பூர் அதிகாரிகள் எப்போதோ உணர்ந்து விட்டார்கள். அதனால் தான் இத்தனை நாள் தாமதம் செய்து காலம் கடத்தினார்கள். இப்போதைய அரசின் முடிவு ஒரு விதத்தில் அவர்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து விடுதலை அளித்துள்ளது” என்று ட்வீட் செய்துள்ளார்.

jagan aus tweet - 2026
“காத்திருந்த காரியம் கந்தர்வர்களால் தீர்ந்தாற் போலாயிற்று” என்று குறிப்பிட்டார் ஐஒய்ஆர் கிருஷ்ணாராவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.