
சர்க்கரை நோயால் சிறுவன் வாடினான். அவனுக்காக நண்பன் சேர்ந்து உயிரை விட்டான். நேற்று சர்க்கரை நோய் தினத்தன்று இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
டயாபடிக் நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன்… தினமும் மூன்று முறை இன்சுலின்! மருத்துவத்துக்கு ஏழு இலட்சம் ரூபாய்! உடல் நிலை சரியில்லாததால் பூச்சி மருந்து குடித்தான் சிறுவன்! மன வருத்தத்தால் அதே மருந்தை குடித்தான் அவனது நண்பன்! இருவரும் உயிரிழந்தனர்!
சர்க்கரைநோய் தினத்தன்று வெளிச்சத்துக்கு வந்த சோகம் இது. அந்த இரு சிறுவர்களும் உயிர் நண்பர்கள். படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மாட்டார்கள்.
பள்ளியிலிருந்து வந்த சிறுவன் ‘பன்னீ’ (11), “அம்மா! தயிர்சாதம் சாப்பிடணும் போல் இருக்கு” என்றான். தாய் தயிர் வாங்கி வர வெளியில் சென்றார். அதற்குள் நண்பனைப் பார்க்கும் ஆர்வத்தால் நண்பன் வீட்டிற்குச் சென்றான். அங்கே அந்த நண்பன் பாஸ்கர் (13), பூச்சி மருந்து குடித்துக் கொண்டிருப்பதை கண்டான். இவன் தடுத்துப் பார்த்தான்.
வாழ்நாள் பூராவும் நோயோடு போராட முடியாது. தினமும் மூன்று முறை ஊசி போட்டுக் கொள்கிறேன். நான் சாகப் போகிறேன் என்றான் பாஸ்கர். அப்படியானால் நானும் உன்னோடு வருகிறேன் என்றான் பன்னீ. இருவரும் சேர்ந்து பூச்சி மருந்து குடித்தனர்.

சிறுவயதிலேயே உடலை வருத்தும் சர்க்கரை நோயால் ஆரோக்கியம் குன்றி பெற்றோருக்குப் பாரமாகி விட்டேனே என்ற வருத்தத்தில் ஒரு சிறுவன் தற்கொலை செய்து கொண்டான். அந்த நண்பனைப் பிரிந்த வாழ்வு எதற்கு என்று மற்றொருவனும் தற்கொலை செய்து கொண்டான்.
உலக சர்க்கரை நோய் தினத்திற்கு ஒரு நாள் முன்பு தெலங்காணா சித்திபேட்டை மாவட்டத்தில் நடந்த இந்த பெரிய சோகம் நவம்பர் 14 புதன்கிழமை அற்று வெளிச்சத்துக்கு வந்தது.
‘மத்தூரு’ மண்டலம் ‘பிட்ட கூடேனி ‘யைச் சேர்ந்த பாஸ்கர் (13) லக்ஷ்மி, ரமேஷ் தம்பதிகளின் மூன்று பிள்ளைகளில் இரண்டாமவன். ஏழாவது படிக்கிறான். அருகிலேயே வசிக்கும் பன்னீ ( 11) ஷோபா, லக்ஷ்மண் தம்பதிகளின் மூத்த பிள்ளை. ஆறாம் வகுப்பு படிக்கிறான்.
பாஸ்கர் சிறுவயதிலிருந்தே சர்க்கரை நோயால் சிரமப் படுகிறான். அவனுடைய மருத்துவச் செலவுக்காக இதுவரை 7 லட்சம் வரை பெற்றோர் செலவு செய்துள்ளார்கள். மகனின் வைத்திய செலவுக்காக தந்தை வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
தயிர்சாதம் கேட்ட மகன் திரும்பி வராமல் போய்விட்டானே என்று அந்த தாய் அழுத சோகம் பார்ப்போர் நெஞ்சைக் கரைத்தது. இந்த சோகத்தை என்னவென்று சொல்வது?