சப்பாத்திக்கும் சாதத்துக்கும் ஒரு காரசாரமான சைட் டிஷ்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
cabbage - 2026

ஸ்பைசி கேபேஜ்

தேவையானவை:

முட்டைகோஸ் – 100 கிராம்,

வெங்காயம் – ஒன்று,

காய்ந்த மிளகாய் – 2,

சீரகம் – அரை டீஸ்பூன்,

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,

சர்க்கரை – கால் டீஸ்பூன்,

சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

cabbage spicy - 2026

வெங்காயம், முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு… சீரகம் சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, வெங்காயம், முட்டைகோஸ், சாட் மசாலாத்தூள் சேர்த்து சிறிதளவு மூழ்கும் வரை தண்ணீர்விட்டு வேக வைத்து இறக்கவும். இதனுடன் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

இதை சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.