ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

Published:

peanut - 2026

வேர்க்கடலை ரைஸ்

தேவையானவை:

வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கவும்), – கால் கப்
காய்ந்த மிளகாய் – 4,
வடித்த சாதம் – ஒரு கப்,
தேங்காய் எண்ணெய் – 50 கிராம்,
கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

peanet rice - 2026

காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். வேர்க்கடலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.

Related articles

Recent articles

spot_img