காஷ்மீர்: புல்வாமாவில் பயங்கரவாதி சுட்டு கொலை!

Published:

kasmir 1 1 - 2026

காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் தாக்குதல் நடந்த பகுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img