தொமு., – கூட்டணிய கட் செய்வோம்..! தொபி., – எங்க கூட்டணிய யாராலும் பிரிக்க முடியாது! கிச்சுகிச்சு மூட்டிய அமைச்சர்!

admk baskaran - 2026

பாஜக.,விடம் இருந்து விலகுவதற்கு நேரத்தை எதிர்பார்க்கிறோம் என அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பேசியதால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான எங்களது கூட்டணியை பிரிக்க முடியாது என்று விளக்கம் அளித்தார் பாஸ்கரன்.

ஏற்கெனவே ரஜினி அரசியலும் பெரியார் அரசியலும் தமிழகத்தில் ஊடகத் தீனியைப் போட்டுக் கொண்டிருக்க, திடீரென்று தன் தனி ட்ராக்கில் ஒரு வண்டியை ஓட்டினார் அமைச்சர் பாஸ்கரன். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறிய நிலையில் பேச்சை மாற்றினார் அமைச்சர் பாஸ்கரன்

கி மு , கி பி போல தொ அ மு , தொ அ பி (தொலைபேசி அழைப்புக்கு முன், பின் ) ஆனா ஒன்னு, அண்ணன் இந்த பேச்சு பேசாட்டி அவர் இருக்கறது யாருக்குமே தெரிஞ்சிருக்காது! தேங்க்ஸ் டு ரஜினி என்று பாஸ்கரனைக் கலாய்க்கிறார்கள் சமூகத் தளங்களில்!

https://twitter.com/sgrajanchennai/status/1219891439779205120

முன்னதாக பாஜக.,விடம் இருந்து விலகுவதற்கு நேரத்தை எதிர்பார்க்கிறோம் என அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பேசியதால், பாஜ., உடனான கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பாஸ்கரன்… பாஜ.,விடம் இருந்து விலகி தனியாக செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம். நீங்கள் எம்எல்ஏ தேர்தலில் எங்களுக்கு ஓட்டுபோடவில்லை.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103 வது பிறந்தநாள் விழாவில், கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்றார். அவர் பேசுகையில், பிஜேபியிடம் இருந்து எந்த நேரமும், நாங்கள் தனியாக பிரிந்து செல்வதற்கு தயாராக, எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலே எல்லாரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மக்களாகிய நீங்கள் தான், எங்களை தேர்தலின் போது ஓட்டளிக்காமல், ஒதுக்கி விட்டீர்களே தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம் என்றார்.

இளையான்குடியில் திமுக கட்சியினரே ஆளுங்கட்சியினர் போல் நடந்து கொள்கிறார்கள். அந்த அளவிற்கு சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சாதாரண மனிதர்கள்; நீங்கள் எங்களை எப்போதும் வேண்டுமானாலும் அணுகலாம். எம்எல்ஏ, சேர்மன் மற்றும் என்னை சட்டையை பிடித்து கேட்கலாம். ஆனால், காங்கிரசையும் திமுகவையும் இதுபோல கேட்க முடியுமா, சந்திக்க முடியுமா, எங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியுமா. பாஜ.,வை வேண்டாம் என ஒதுக்கினாலும் நீங்கள் திமுகவிற்கு தான் ஓட்டுபோடுவீர்கள் என்று கூறி சற்று ஆசுவாசப் பட்டார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

என்னதான் நாங்க பாஜக.,வை விட்டு விலகி வந்தாலும் நீங்க திமுக.,வுக்கு தான் ஓட்டுப் போடுவீங்க என்று பாஸ்கரன் பேசியது கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது பேச்சுக்கு மறு பேச்சாக, பாஜக., அதிமுக., கூட்டணியை பிரிக்க முடியாது என்று கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories