கேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
nethrankai - 2026

நேந்திரங்காய் தோல் கறி

தேவையானவை:

நேந்திரங்காய் – 2,
தேங்காய் (துருவிக் கொள்ளவும்), – அரைமூடி
மிளகாய் – 4,
புளி(கரைத்துக் கொள்ளவும்), -நெல்லிக்காய் அளவு
எண்ணெய்,கடுகு,உளுத்தம் பருப்பு – தாளிக்க தே. அளவு,
உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு,

செய்முறை:

nethrankar thol kari - 2026

நேந்திரங்காயின் தோலை சிறிதளவு சதைப் பற்றோடு சீவி எடுத்து பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.

சீவிய நேந்திரங்காய் தோலுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். பிறகு புளிக் கரைசல், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு, அரைத்த தேங்காய், பச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: மீதமுள்ள சதைப்பற்றை வெயிலில் காய வைத்து கஞ்சி செய்ய பயன்படுத்தலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.