கேரள சமையல்: பலாக்காய் மசால்!

Published:

jack fruit - 2026

பலாக்காய் மசால்:
தேவையான பொருட்கள்:

பிஞ்சு பலாக்காய் -1;
பெரிய வெங்காயம் -2;
தக்காளி -2;
வர மிளகாய் -6;
தேங்காய்ப்பூ -1 கப்;
சோம்பு, சீரகம் -தலா -1ஸ்பூன்;
கசகசா -3 ஸ்பூன்;
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்;
எண்ணெய் -2 ஸ்பூன்;
உப்பு -தேவையான அளவு.

செய்முறை :

palakkai masal - 2026

பலாக்காயை தோல் நீக்கி டைமன் சைஸில் நறுக்கி மஞ்சள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். மிளகாய், தேங்காய், கசகசாவை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் தேங்காய் விழுதையும் சேர்த்து வதக்கவும். பின் வேக வைத்த பலாக்காய் சேர்த்துக் கிளறி கலவை கெட்டியானதும் இறக்கி பறிமாறவும்.

சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ஏற்றது.

Related articles

Recent articles

spot_img