வீட்டிலே செய்யலாம் பிஸ்கெட்:

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

ஆரஞ்சு பிஸ்கட்

orange biscuits 1 - 2026

தேவையானவை:
மைதா- 1 கப்
வெண்ணை – 75 கிராம்
சர்க்கரை- 1/4 கப்
ஆரஞ்சு எசன்ஸ் – 2 டீ ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1/4 டீ ஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் – 1/4 கப்

செய்முறை:
பேக்கிங் பவுடர், மைதா இரண்டையும் ஒன்றாக சலித்துக்கொள்ளுங்கள். சர்க்கரை, வெண்ணை இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு குழையுங்கள். அதனுடன் மைதா சேர்த்து பிசறுங்கள். கடைசியில் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்கு பிசைந்து, சற்று கனமான சப்பாத்திகளாக இடுங்கள்.

சப்பாத்திகளை பிஸ்கட் கட்டரால் வெட்டி, எண்ணை தடவி, மைதா தூவிய ட்ரேயில் அடுக்கி, ‘கேக் ஓவன்’ இருப்பவர்கள் 160 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள். ‘கேக் ஓவன்’ இல்லாதவர்கள் கடாயில் மணல் போட்டு சூடுபடுத்தி, அதன் மேல் பேக்கிங் பாத்திரத்தை வைத்து, அரைமணி நேரம் மூடி வைத்து பேக் செய்யவும். மேற்புறம் பொன்னிறமானதும் எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.