மாலை நேர டிபன்: சேமியா வடை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
semiya 1 - 2026

சேமியா வடை

தேவையானவை:

சேமியா – ஒரு கப்,
தயிர் – முக்கால் கப்,
இஞ்சி – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 2,
வெங்காயம் – ஒன்று,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

semiya vada 1 - 2026

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தயிரை விட்டு சேமியா சேர்த்து 20 முதல் 30 நிமிடங்கள் ஊற விடவும். நன்கு ஊறியதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும்.

பிறகு, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, சிறுசிறு வடைகளாகத் தட்டி… சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் டெலீஷியஸ் சேமியா வடை ரெடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.