நெல்லை அல்வா சாப்ட்டிருப்பீங்க.. நெல்லி அல்வா சாப்டிருக்கீங்களா?

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
nellikai halwa
nellikai halwa

நெல்லிக்காய் அல்வா

தேவையானவை:
நெல்லிக்காய் – 10,
சர்க்கரை – 150 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய்யில் வறுத்த முந்திரிபருப்பு – 10,
நெய் – 100 மில்லி,
விருப்பமான ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.

செய்முறை:
நெல்லிக்காயை லேசாக வேகவிட்டு, கொட்டையை எடுத்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு, அரைத்த நெல்லிக்காயை போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி… ஃபுட் கலர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, வறுத்த முந்திரியை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: நெல்லிக்காய் ரத்த சோகை போக்கும்; கண்ணுக்கும் மிகவும் நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.