
கீரை புளிப்பச்சடி
தேவையானவை:
பொடியாக நறுக்கிய அரைக்கீரை – ஒரு கப்,
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு,
வெல்லம் – 50 கிராம்,
பச்சை மிளகாய் – ஒன்று,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கீரையை வதக்கி, புளியைக் கரைத்து விடவும். கீரை வெந்ததும் வெல்லம், உப்பு சேர்த்து, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இது வற்றல் குழம்பு சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன்.


