சீசனல் ஃபுட் : பலாப்பழ ஜாமும்,பால்ஸூம்

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
jack fruit jam 1 - 2026

பலாப்பழ ஜாம்

தேவையானவை:
நன்கு கனிந்த பலாச்சுளைகள் – 10 (பெரியது),
வெல்லம் – அரை கப்,
நெய் – கால் கப்.

செய்முறை:
பலாச்சுளைகளை வேகவைக்கவும். ஆறிய பின்பு மத்தால் நன்கு மசிக்கவும். வாணலியில் நெய்யைக் காயவிட்டு… மசித்த விழுது, பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும்.

இது, சப்பாத்தி (அ) பிரெட்டுக்கு தொட்டுக்கொள்ள மிகவும் ஏற்றது.

jack fruit balls 1 - 2026

பலாப்பழ பால்ஸ்

தேவையானவை:
மைதா மாவு – ஒரு கப்,
பலாப்பழ ஜாம் – ஒரு கப் (மேலே இதற்கான ரெசிபி இருக்கிறது),
நெய் – சிறிதளவு,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:
மைதா மாவுடன் உப்பு, நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைக்கவும். கையில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு, பலாப்பழ ஜாமை சிறிய பந்து போல உருட்டி, மைதா கலவையில் முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.