
முடக்கத்தான் தோசை
தேவையானவை:
முடக்கத்தான் கீரை – ஒரு கைப்பிடி அளவு,
இட்லி அரிசி – 200 கிராம்,
உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய், பூண்டுப் பல் – தலா 2,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கீரையை சுத்தம் செய்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கீரையை வதக்கவும். இட்லி அரிசி, உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கிரைண்டரில் சேர்த்து, இத்துடன் வதக்கிய கீரை, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, தோல் உரித்த பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை நன்கு கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை தோசையாக ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு, இருபுறமும் சுட்டெடுக்கவும்.
குறிப்பு: முடக்கத்தான் கீரை கால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்; வீக்கத்தை குறையவைக்கும்.