செமையா ஒரு இனிப்பு போண்டா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
ravai ponda

இனிப்பு போண்டா

தேவையானவை:
ரவை – முக்கால் கப்,
பச்சரிசி மாவு – கால் கப்,
பொடித்த வெல்லம் – 1 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

ரவையை சிறிது தண்ணீர் தெளித்து பிசறி, நன்கு அழுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். நன்கு கெட்டியாக அரையுங்கள். பின்னர் அதனுடன் வெல்லத்தூள் சேர்த்து அரையுங்கள்.

நன்கு அரைபட்டதும் பச்சரிசி மாவைத் தூவி, இரண்டு நிமிடம் அரையுங்கள். எண்ணெயை நிதானமான தீயில் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள்.

மாவு இளக்கமாக இருந்தால் சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, வேக வைத்தெடுங்கள். (வெல்லத்துக்கு பதில் சர்க்கரையும் சேர்க்கலாம்).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.