ஆரோக்கிய உணவு: மிட்டாய் கொழுக்கட்டை!

சற்றுமுன்
mittai kozhukkatai

மிட்டாய் கொழுக்கட்டை

தேவையானவை:
கேழ்வரகு மாவு – ஒரு கப், களைந்து, உலர்த்தி, அரைத்த பச்சரிசி மாவு – அரை கப்,
சீரக மிட்டாய் – கால் கப்,
துருவிய வெல்லம் – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம் – தலா ஒரு சிட்டிகை.

செய்முறை:

கேழ்வரகு, அரிசி மாவை வெறும் கடாயில் வறுத்து வைக்கவும். வெல்லத்தூளை அடிகனமான பாத்திரத்தில் போட்டு ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும்.

மீண்டும் வெல்லக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு, பாகு காய்ச்சவும். அதில் ஏலக்காய்த்தூள், சீரக மிட்டாய் சேர்த்துக் கிளறி, பச்சை கற்பூரம் சேர்க்கவும். இதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவையும் சேர்த்துக் கிளறவும்.

மாவு வெந்ததும் விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டைகளாக செய்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.