ஆரோக்கிய டிபன்: கற்பூர வள்ளி இலை பஜ்ஜி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
omavalli-leaf-pajji

கற்பூர வள்ளி இலை பஜ்ஜி

தேவையான பொருட்கள்

கற்பூர வள்ளி இலை -10
கடலைமாவு -100 கிராம்
மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்
மஞ்சள்தூள் -1 டி ஸ்பூன்
அரிசிமாவு -2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு -1 டி ஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டி ஸ்பூன்
உப்பு மற்றும் தண்ணீர் -தேவையான அளவு

செய்முறை:
முதலில் கற்பூர வள்ளி இலைகளை நன்கு சுத்தம் செய்து தனி தனி இழைகளாக பிரித்து எடுத்து வைத்து கொள்ளவும்
பின்பு எடுத்துவைத்துள்ள கடலை மாவு மற்றும் இதர பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் ஒவ்வொரு இழையாக எடுத்து மாவில் நினைத்து எண்ணையில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
சூடான சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான கற்பூர வள்ளி இலை பஜ்ஜி தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.