பீர்க்கங்காய் கடலைப்பருப்பு கூட்டு!

Published:

Screenshot 2020 0806 170154 - 2026

பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு :

தேவையான பொருட்கள்

 பீர்க்கங்காய். _1

 கடலை பருப்பு. -கால் கப்

சின்ன வெங்காயம். -5

பல் பூண்டு -5

மஞ்சள் தூள். -அரைடீஸ்பூன்

சாம்பார் மிளகாய்த்தூள்-அரை டீஸ்பூன்

உப்பு. -தேவையான அளவு

 துருவிய தேங்காய். -2டீஸ்பூன்

தாளிக்க

ஆயில். 3டீஸ்பூன்

கடுகு. 1 டீஸ்பூன்

உளுந்து பருப்பு. 1 டீஸ்பூன்

வர மிளகாய் கிள்ளியது. 1

சிட்டிகை பெருங்காயம். 2

கறிவேப்பிலை. சிறிது

செய்முறை

பீர்க்கங்காய் கழுவி தோல் சீவி நறுக்கி வைக்கவும். 5 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு தோல் நீக்கி கழுவி வைக்கவும்.கடலை பருப்பு 1/4 கப் கழுவி ஊற விடவும்.

கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் வெட்ட கடுகு 1 டீஸ்பூன், உளுந்து பருப்பு 1 டீஸ்பூன் 1 சிட்டிகை பெருங்காயம் சிறிது கருவேப்பிலை தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் இரண்டாக நறுக்கி, பூண்டு 5 பல் சேர்த்து வதக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்பை சேர்த்து தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்,மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்,உப்பு சேர்த்து வேகவிடவும்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

கடலை பருப்பு வெந்தவுடன் நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும்.

துருவிய தேங்காய் இரண்டு டீஸ்பூன் சேர்த்து பிரட்டி எடுத்து வைக்கவும். சுவையான பீர்க்கங்காய் கடலைபருப்பு கூட்டு ரெடி.

Related articles

Recent articles

spot_img