குளிருக்கு சூடா வெங்காயப் பூ பக்கோடா!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
onion-pu-pakoda

வெங்காயப் பூ பக்கோடா

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் -3
கடலைமாவு -2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு -2 டீஸ்பூன்
மைதா மாவு -2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
மிளகுத்தூள் -அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு *தேவையான அளவு

செய்முறை:

முதலில் பெரிய வெங்காயத்தை தோலை நீக்கிவிட்டு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.இதனை மேல்பகுதி சிறிது நீக்கிவிட்டு படத்தில் உள்ளபடி மேலிருந்து கீழாக முக்கால் பாகத்திற்கு சுற்றிலும் நறுக்கவும்.(ஆழமாக நறுக்கினால் வெங்காயம் உதிர்ந்து விடும்). நறுக்கிய வெங்காயத்தை தண்ணீரில் சேர்க்கவும்.

ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை அதில் அதில் சேர்த்து நன்றாக மாவு படும்படி பிசிறி விடவும். கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காய பூக்களை சேர்த்து இரண்டு புறமும் திருப்பிப் போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும்.

இல்லையெனில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி உதிரி ஆகவும் மாவில் சேர்த்து பொரித்து எடுக்கலாம். அவ்வளவுதான் சுவையான வெங்காய பூ பக்கோடா தயார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.