கிருஷ்ண ஜெயந்திக்கு ஆரோக்கிய ராகி வெல்ல சீடை!

Published:

Screenshot_2020_0811_173213

ராகி ஸ்வீட் சீடை

தேவையானவை:

ராகி மாவு। – 5 டேபிள் ஸ்பூன் (75 கிராம்),

பச்சரிசி மாவு। – 3 டேபிள் ஸ்பூன்,

வறுத்து அரைத்த உளுந்து மாவு – 2 டீஸ்பூன் (அனைத்து மாவுகளையும் சேர்த்து நன்கு சலிக்கவும்),

பாகு வெல்லம்। – 150 கிராம்,

ஏலக்காய்த்தூள், வறுத்த வெள்ளை எள் – தலா ஒரு டீஸ்பூன், பொரிக்க எண்ணெய் – கால் கிலோ,

நெய் – 1 ஸ்பூன்.

செய்முறை:

வெல்லத்தைப் பொடித்து 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, 1 டீஸ்பூன் நெய், ஏலக்காய்த்தூள், எள் சேர்க்கவும். பிறகு சலித்த மாவை இதில் சிறிது சிறிதாகத் தூவி கட்டியின்றிக் கிளறவும், ஆறிய பின் சிறு சிறு சீடைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். சத்தும் சுவையும் நிறைந்த சீடை இது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img