கனவின் விளைவு: பலருடன் விருந்து உண்பதாக கண்டால்..

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1

பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. துன்பங்கள் வந்தடையும். ஆனால் கன்று ஈன்ற பசுவைக் காண்பது செல்வ வளத்தை உண்டாக்கும்.

உத்தியோகம்: ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கு அறிகுறி. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.

வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது போல் கனவு கண்டால், அவ்வாறே செயலில் நிகழவும் கூடும். இல்லையேல், ஏதேனும் நிர்வாகத் தவறுகள் செய்து, மேலிட விரோதத்தைச் சம்பாதிக்க நேரிடலாம்; வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள், அதில் பிரச்னைகள் எழுவதாக கனவு கண்டால், தொழிலில் சிக்கல்கள் ஏற்படலாம்.

உழவு: ஒருவர் தாமே உழவுத் தொழில் செய்வதாக கனவு கண்டால், அவரது வாழ்க்கை வளம் அனைத்தையும் பெற்றுத் திகழும்.

உற்ஸவம்: தேரோட்டம் போன்ற திருவிழாக்களைக் கனவில் காணின், உடனடியாக உறவினர் ஒருவரின் மரணச் செய்தியைக் கேள்வியுற நேரிடும்.

உண்ணல்: தான் மட்டும் தனித்து உண்பதுபோல் கனவு காணின் துன்பங்கள் உண்டாகும். உறவினர்களைப் பிரிய நேரிடும். தொழில் நஷ்டம் ஏற்படும்.

அவ்வாறு கனவு காண்பவர் விவசாயியாக இருப்பின் விளைச்சல் மோசமாக இருக்கும்; குடும்பத்தில் சச்சரவுகள் அதிகமாகும்.

பலருடன் சேர்ந்து விருந்தில் உண்பது போல் கனவு கண்டால், உத்தியோக உயர்வு ஸித்திக்கும். திருமணம் ஆகாதவர்கள் இந்தக் கனவைக் கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்கள், விருந்துண்டு மகிழ்வ தாகக் கனவு கண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

தோன்றும்..‌.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.