சூப்பரா கசகசா அல்வா செஞ்சு அசத்துங்க!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Poppy Alva - 2026

தேவையான பொருட்கள்

கசகசா -1கப்
சக்கரை -11/2கப்
பால் -1கப்
நெய் -100மிலி

செய்முறை
முதலில் கசகசா வை இரவு ஊற வைத்து கொள்ள வேண்டும். காலையில் அதை சுத்தம் செய்து எடுத்து தண்ணீர் வடித்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் போட்டு பாலை ஊற்றி நன்கு நைஸாக அரைத்து கொள்ளவும்

இப்போது வாணலியில் அரைத்த விழுதை சேர்த்து ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொண்டு இருக்க வேண்டும். கொஞ்சம் கெட்டியானதும் நெய் சேர்க்க வேண்டும். பின்னர் மிண்டும் கலந்து கொண்டு இருக்க கெட்டியாக ஆகும் போது4ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். மிண்டும் இறுகியதும் நெய் தேவையான அளவு விட்டு கிளறவும் வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கவும்.

பின்னர் அல்வா கொஞ்சம் எடுத்து ஒரு தட்டில் போட்டு கொண்டு சூடு ஆறியதும் உருட்டி பார்த்தால் உருண்டை பதம் வர வேண்டும். அப்போது அடுப்பில் இருந்து இறக்கி கொள்ள வேண்டும்இப்போது கசகசா அல்வா ரெடி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.