அசத்தலா ஒரு கசகசா புலாவ்!

Published:

Poppy Pulao - 2026

கசகசா புலாவ்
தேவையான பொருட்கள்

சம்பா அரிசி – ஒரு கப்,

கசகசா – ஒரு டேபிள் ஸ்பூன்,

முந்திரி – 6,

வெங்காயம் – ஒன்று,

பச்சை மிளகாய் – 3,

கிராம்பு, ஏலக்காய் – தலா ஒன்று,

சீரகம். – கால் டீஸ்பூன்,

இஞ்சி– பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு. – தேவையான அளவு.

செய்முறை:

கசகசா, முந்திரியை ஊற வைத்து நைஸாக அரைக்கவும். வெங்காய த்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும்.

பிறகு, அரைத்த கசகசா விழுது, உப்பு, ஒன்றரை கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடி, ஆவி வந்ததும்

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

வெயிட் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். வெஜிடபிள் குருமாவோடு பரிமாறவும்.

Related articles

Recent articles

spot_img