பொங்கல் ஸ்பெஷல்: பனங்கிழங்கு பர்பி!

Published:

Palmyra-tuber-bharfi
Palmyra-tuber-bharfi

பனங்கிழங்கு பர்ஃபி
தேவையான பொருட்கள்

வேகவைத்த பனங்கிழங்கு. – 6
தண்ணீர். -1/4கப்
சர்க்கரை. -1 கப்
ஏலக்காய். . – 2
நெய். -2 டேபிள் ஸ்பூன்
துருவிய பிஸ்தா பருப்பு -1 டேபிள் ஸ்பூன்

செய்முறை
ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக கீரிஸ் செய்து வைக்கவும்.

வேக வைத்த பனங்கிழங்கின் வெளி பக்கத்தில் உள்ள நார்களை அகற்றி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

பின்பு மிக்ஸி ஜாரில் ஏலக்காயுடன் சேர்த்து ஒரிண்டு சுற்றுகள் அரைத்து எடுக்கவும்(துருவிய தேங்காய் பதம்)

ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு துருவலை மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

பனங்கிழங்கு துருவல் சர்க்கரையுடன் நன்றாக கலந்து கெட்டியாக மாறும் வரை வதக்கவும்.
இறுதியாக மீதமுள்ள நெய் சேர்த்து மேலும் ஒரு 5 நிமிடம் நன்கு வதக்கி பின்பு நெய் தடவிய தட்டில் பரப்பி வைக்கவும்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

பின்பு துருவிய பிஸ்தா பருப்பை தூவி விட்டு, விருப்பமான வடிவில் வெட்டி எடுக்கவும். சுவையான பனங்கிழங்கு பர்பி தயார்

Related articles

Recent articles

spot_img