மச்சம் சொல்லும் மிச்சம்: இப்படி இருந்தால் காதல் உணர்வு அதிகம்!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Mole-1
Mole-1

உதடுகளில் மச்சம்
உதடுகளில் உள்ள மச்சம் பெருஞ்செல்வத்தைக் குறிக்கும். தாராள பணப்புழக்கம் இருக்கும். சரஸ்வதி தேவியின் கடாட்சம் கிட்டும்.

கல்வியில் உயர்ந்த நிலையை எளிதில் அடைவார்கள். கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை போன்ற ஏதாவது ஒன்றில் பெரும்புகழை இவர்கள் எய்தக்கூடும். கட்டுப்பாடில்லாமல் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இவர்களிடம் இருக்கும்.

முகவாயில் மச்சம்
நல்ல அம்சமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். ஜோதிடம், வைத்தியம் போன்றவற்றில் கைதேர்ந்தவர்கள். உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்படும். குடும்பவாழ்வு திருப்திகரமாக இருக்கும்.

நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோக முள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.

மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.

மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

உதட்டில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் இயற்கைக் விரும்பிகளாக இருப்பார்கள்.

மேல் உதட்டில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு அனாவசிய செலவுகள் செய்ய பிடிக்காது.

கீழ் உதட்டில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள்.

தாடையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் தேனீ போல சுறுசுறுப்புடன் இயங்குவார்கள்.

மேல் மற்றும் கீழ் உதடுகள் – இவர்கள் ஒழுக்கம் மற்றும் உயர்ந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மேல் வாய் பகுதி – இவர்களுக்கு அமைதி மற்றும் அன்பான கணவர் அமைவார்.

வளரும்………..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.