மச்சம் சொல்லும் மிச்சம்: யார் அதிர்ஷ்டசாலி!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Mole-3
Mole-3

செவிகளில் மச்சம்

வலது செவியில் மச்சம் அமைந்திருப்பது, ஆண்களுக்கு நல்ல பலனைத் தரும். பெண்களுக்கு சுமாரான பலனையே தரும். பலவிதமான தொழில்களில் நல்ல பயிற்சியும், தேர்ச்சியும் இருக்கும். பெற்றோரிடமும் மனைவியிடமும் அதிக பாசம் இருக்கும்.

இடது பக்க செவியில் மச்சம் இருப்பது, ஆண்களுக்கு நல்ல பலனை அதிகம் தருவதில்லை. பெண்களுக்குச் சிறந்த பலனைத் தரும். பணி எதுவாயினும் முயற்சியுடன் வெற்றியடைவார்கள். பிற்பகுதி வாழ்க்கை இவர்கள் விரும்பியவாறு அமையும்.

வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

காதில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் வாழ போகும் வீடு சகல வசதிகளும் நிறைந்ததாக இருக்கும்.

காதின் பின்புறம் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் கைகளில் பணம் சரளமாக புழங்கும்.

வலது காதின் முனையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக கொண்டவர்கள்.

இடது காதின் முனையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் பெரும் செலவாளிகளாக இருப்பார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.