சக மாணவனோடு பேசிய காதலி! கொன்று கால்வாயில்‌ வீசிய கல்லூரி மாணவன்!

Published:

Krishnaveni Private College in Narasaraopet - 2026

ஆந்திராவின் குண்டூரில் நரசரோபேட்டையில் உள்ள கிருஷ்ணவேனி தனியார் கல்லூரியில் அனுஷா, என்ற மாணவியும் விஷ்ணுவர்தன் ரெட்டி,என்ற மாணவரும் டிகிரி படித்து வந்தார்கள்.

இந்நிலையில் அந்த பெண் அனுஷாவை அந்த ரெட்டி காதலித்து வந்தார் .ஆனால் அனுஷா எல்லோருடனும் ஜாலியாக பழகுவது போலத்தான் ரெடியிடமும் பழகியுள்ளார். ஆனால் ரெட்டி அதை காதல் என்று தவறாக புரிந்து கொண்டு விட்டு அவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் அந்த அனுஷா கல்லூரியில் வேறொரு ஆண் நண்பரோடு பேசிக்கொண்டிருந்தார். இதை ரெட்டி பார்த்து விட்டார். அதன்பிறகு அது பற்றி அனுஷாவிடம் சென்று கேட்டபோது அவர் சரியாக பதில் கூறாமல் சென்றுள்ளார்.

அதனால் அனுஷா மீது ரெட்டி கோபமாக இருந்தார் .அவரை பழிவாங்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தார். கடந்த புதன் கிழமையன்று அந்த அனுஷாவை ஒரு தனிமையான இடத்திற்க்கு ஜாலியாக பேசலாம் என்று கூறி வற்புறுத்தி கூட்டி சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கு மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த ரெட்டி அனுஷாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் அவரின் உடலை பாலபாடா அருகே ஒரு கால்வாயில் அவர் வீசிவிட்டு, நரசராபேட்டை போலீசில் சரணடைந்தார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

இந்த கொலை பற்றி கேள்விப்பட்ட அந்த கல்லூரி மாணவர்கள் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போராட்டம் நடத்தினார்கள். ஆந்திர முதல்வர் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கினார்.

Related articles

Recent articles

spot_img