மே 20 புதன்கிழமை மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்த அம்பான் புயல், கோல்கட்டா விமான நிலையத்தில் பெரு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையமே வெள்ளத்தில் மிதக்கிறது. நிறுத்தி வைக்கப் பட்டிருந்த விமானங்கள் சேதமடைந்துள்ளன.
வங்கக் கடலில் உருவான அம்பான் புயல் புதன்கிழமை நேற்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்திடையே கரையைக் கடந்தது. இதனால் அங்கே 6 மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழையுடன் சூறாவளிக் காற்று வீசியது. மணிக்கு 120 கி.மீ., முதல் 150 கி.மீ., வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் கட்டடங்கள் பல சேதம் அடைந்தன.
கோல்கத்தா விமான நிலையமும் இந்த புயலுக்கு தப்பவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப் பட்டது. என்றாலும், புயல் விமான நிலைய கட்டடங்களை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. விமான நிலைய கட்டடங்கள் ஓடுபாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்து ஆறுபோல் காட்சி அளித்தது.