
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புக்கு 2,961 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 1000 -த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர்.
இதுவரை 250 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் நாட்டில் அதிக உயிரிழந்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடுத்து 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களாக பிற மாநிலங்களை சேர்ந்தவர்களே பணியாற்றி வருகின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த செவிலியர்கள் ஏராளமானோர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியாற்றும் இவர்கள் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் நோயாளிகள் சிலர் தங்கள் மீது எச்சில் துப்புவதாகவும், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் கூறி அவர் தங்களது பணிகளை ராஜினாமா செய்துள்ளனர்
Manipur:185 nurses have quit their job from hospitals in Kolkata&returned to Imphal. Cristella, a nurse says,"We're not happy that we left our duties. But we faced discrimination,racism&people sometimes spit on us.Lack of PPE kits&people used to question us everywhere we went". pic.twitter.com/y4nlwbhaK6
— ANI (@ANI) May 20, 2020