health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பொடுகு, தூக்கம் வர, நீரழிவு, கண்குளிர்ச்சி..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

பொடுகு மறைய…

மிளகை பால் விட்டு மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். இரண்டு மூன்று நாள்கள் செய்துவர பொடுகு போயே போயிரும்.

பெருங்குடலில் புற்று நோயா?

மாங்காயிலும் மாம்பழத்திலும் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய். ஹெர்னியா நோய்களையும் குணப்படுத்தும் சக்தி இருப்பதாக கண்டு பிடித்திருக்கிறார்கள்.

கண்கள் குளிர்ச்சியடைய…

சாதிப்பூ தலைவலி, கண் படலம். தேக உஷ்ணம் இவற்றைக் கட்டுப் படுத்தும். எண்ணெயில் இப்பூக்களைப் போட்டு வெயிலில் காய வைத்தெடுத்து அந்த எண்ணெயைக் கூந்தலில் தடவி வர கண்கள் குளிர்ச்சியடையும். நல்ல பார்வை ஏற்படும்.

இதே எண்ணெயை உடலில் தடவி ஊற வைத்துக் குளிக்க சொறி சிரங்குகள் போகும். உடல் நமைச்சல் நீங்கும்.

நீரிழிவு கட்டுப்பட…

மாந்தளிர் ஒரு கைப்பிடி அளவும் மாம்பூ ஒரு கைப்பிடியளவும் எடுத்து நிழலில் உலர்த்தி இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினமும் காலையில் ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு கரண்டி துளைப் போட்டு கலக்கிக் குடிக்க நீரிழிவு கட்டுப்படும்.

நல்ல தூக்கத்திற்கு…

மருதாணியின் இலை, பூ, காய் அனைத்திற்கும் நல்ல மருத்துவ சக்தி உண்டு. இரவில் தலையணையின் கீழ் சில கொத்து மருதாணிப் பூக்களை வைத்துக் கொண்டு படுக்க நல்ல தூக்கம் வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.