health tips - 2026

அப்பாச்சி தீர்வு: தளர்ச்சி, மாதவிடாய் வலி, பௌத்திரம், எக்ஸீமா, மஞ்சள் காமாலை..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

தளர்ச்சி நீங்க…

அரசு ஆண்மை தரும். அரசம் பழத்தை உலர்த்தி சூரணித்து தினமும் இரவில் 15 கி அளவு பாலில் அருந்த விந்து கட்டும். ஆண்மை ஊக்கம் பெறும்.

ஓரிதழ் தாமரை என்ற மூலிகை தங்கபஸ்பத்திற்கு சமமானது. இதனை அரைத்து நெல்லிக்காயளவு தினமும் இரவில் பாலில் கலந்து பருக தாது விருத்தி ஏற்படும். செம்பருத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து நீர்விட்டுக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துப் பருகி வர உணர்வும் உற்சாகமும் கரை புரண்டு ஓடும்.

முருங்கைப் பிசினை உலர்த்தி பொடித்து. முருங்கை விதைப் பொடியுடன் சம அளவு கலந்து வைத்துக் கொண்டு தினமும் பாவில் 10 கிராம் கலந்து அருந்தி வர உறவு இன்பமுற விளங்கும்.

தூதுவளைக் கீரையை நெய்விட்டு வதக்கி சுவைக்கு உளுந்தம்பருப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சாப்பிட்டு வர ஏழு நாள்களில் நல்ல பலன் கிடைக்கும்.

இயற்கை இனிப்புகளுக்கு விந்து சக்தியை பெருக்கும் சக்தி உண்டு.
இரவு சாப்பாட்டுக்கு முன் தேங்காய், வாழைப்பழம், பேரிச்சம்பழம்
கலந்து சாப்பிடுவது நல்லது. தேன். முளைகட்டிய பயிறு. முளை கட்டிய கோதுமை, இளநீர் இவற்றை தினசரி உணவில் சேர்த்து பலன்
பெறலாம்.

பன்னீர் திராட்சையை அரை தம்ளர் எடுத்து அது மூழ்கும் வரை நீர் ஊற்றி சிறிது நேரம் ஊறிய பின் பிழிந்து அதே அளவு காய்ச்சிய பசும்பால் கலந்து இரவு உறங்கப் போகும் முன் தொடர்ந்து பருக நல்ல பலன் கிடைக்கும்.

மாதவிடாய்க் காலத்தில் வயிற்று வலியா?

வெந்தயத்தை வறுத்து இடித்துப் பொடி செய்து அத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி நீங்கும்.

பௌத்திரம் குணமாக…

குப்பை மேனிச் செடியின் வேரைச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டு களாக நறுக்கி வெயிலில் காய வைத்து இடித்து மெல்லிய துணியில் சலித்து வைத்துக் கொண்டு சிட்டிகைப் பொடியை பசு வெண்ணெயில் குழப்பி காலை, மாலை சாப்பிட்டு வர குறையும். உணவில் காரம், புளி சேர்க்கக் கூடாது. மோர் சாதம் சாப்பிடலாம்.

எக்ஸிமா தொல்லையா?

கேரட்டை அவித்து அரைத்து எக்ஸிமா படையின் மீது பற்று போட்டு வர சில நாள்களில் எக்ஸிமா காய்ந்து விடும்.

மஞ்சள் காமாலையா?

மஞ்சள் காமாலைக்கும் பால் இயல் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு
உண்டு. பி-வைரஸ் தாம்பத்திய உறவு மூலம் பரவக் கூடியது. ஆகவே. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.