உக்ரைன்- ரஷ்யா யுத்தத்தில் சமையல் எண்ணை விலை உயர்வு…

Published:

உக்ரைனில் நடந்துவரும் யுத்தத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.தங்கம் விலையும் கூடியது.

தற்போது இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயில் 80 சதவீதத்தை உக்ரைனும் 10 சதவீதத்தை ரஷ்யாவும் சப்ளை செய்கின்றன. இந்த இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போரால் இதன் இறக்குமதி தடைபட்டுள்ளது.
இதனால் சூரியகாந்தி பாமாயில் விலை லிட்டருக்கு 35 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் பாமாயில் லிட்டர் 125க்கு விற்றது தற்போது 160 ரூபாய்; சூரியகாந்தி எண்ணெய் 140க்கு விற்றது 175 ரூபாயாக உயர்ந்துள்ளது.பாமாயில் விலை மூன்று நாளில் மட்டும் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது” என எண்ணை வியாபாரிகள் தெரிவித்தனர்.ரஷ்யா-உக்ரைன் யுத்தம் நீடித்தால் எண்ணை விலை மேலும் உயரும் என்றே எண்ணை வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

1646149165484204 0 1 - 2026

Related articles

Recent articles

spot_img