health tips - 2026

அப்பாச்சி தீர்வு: சுரம், பிரசவமான பெண்களுக்கு, ஈரல் நோய், வயிற்றுபொருமல்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

நீண்டகால சுரத்திற்கு…

பவள மல்லி இலைச் சாற்றையும், தேனையும் சம அளவு கலந்து காலை, மாவை ஓர் அவுன்ஸ் வீதம் உட்கொள்ள நீண்டகால ஜுரம் குணமாகும்.

பிரசவமான பெண்களுக்கு…

நெருஞ்சில் இலைச்சாற்றை ஓர் அவுன்ஸ் பிரசவத்திற்குப் பிறகு கொடுத்து வர உதிரக் கழிவை தாராளமாக்கும்.

ஈரல் நோய்களுக்கு…

உளுந்தங்களியை தினமும் சாப்பிட்டு வர ஈரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பாசாய நோய்களும் குணமாகும்.

மார்பகங்கள் ஆரோக்கியமாகத் திகழ…

மார்பகத்தில் விளக்கெண்ணெய் தடவி அதன் மேல் மாதுளம் விதைகளைத் தூள் செய்து தூவி பஞ்சு வைத்துக் கட்டி வர மார்பகங்கள் ஆரோக்கியமாகத் திகழும்.

வயிற்றுப் பொருமல் குணமாக…

வேலிப் பருத்தி இலையை இடித்து சாறெடுத்து அரை ஸ்பூன் சாற்றுடன் அரை ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து ஒரே வேளை சாப்பிட வயிற்றுப் பொருமல் குணமாகி நல்ல பசியும் ஏற்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.